நாடாளுமன்ற உறுப்பினர்களால் மீள ஒப்படைக்கப்படாத ஆயுதங்கள்!
1980 முதல் 1990 வரையிலான காலப்பகுதியில் தமக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் மீள ஒப்படைக்கவில்லை என நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும சபையில் எழுப்பிய கேள்விக்கு வழங்கிய பதிலில் இது தெரியவந்துள்ளது.
மீளளிக்கப்படாத ஆயுதங்கள்
மேலும், ஆயுதங்கள் வழங்கப்பட்ட 150 பேரில் 100க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வரை ஆயுதங்களைத் திருப்பிக் கொடுக்கத் தவறியுள்ளதாக சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ளது.
சபையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி ஆயுதங்களை திருப்பிக் கொடுக்காத
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
இதேவேளை 1989 ஆம் ஆண்டு முதல் இன்று வரை எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தானியங்கி ஆயுதங்கள் வழங்கப்பட்டதா? என்று அழகப்பெரும எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இது போன்ற ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




