இணையத்தில் அதிகம் பகிரப்படும் அர்ஜூனவின் புதிய புகைப்படம்
உலக கிண்ணத்தை வெற்றி கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜூன ரணதுங்கவின் (Arjuna Ranatunga) அண்மைய புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
குறித்த புகைபடத்தில் உள்ள அவரின் உடல் மாற்றத்தை பயனர்களால் நம்ப முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜூன ரணதுங்க, 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் ஒரு நட்சத்திர வீரராக இருந்தார்.
அவரது தலைமையின் கீழ், இலங்கை அணி தங்கள் வரலாற்றில் முதல் தடவையாக பட்டத்தை வென்றது.
உடல் எடை
மேலும், ரணதுங்க விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அரசியலில் நுழைந்து இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவ் (Kapil Dev) உடன் அவர் எடுத்துக் கொண்டுள்ள சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
முன்னதாக பருத்த உடலமைப்பைக் கொண்டிருந்த அவர் மருத்துவ ரீதியாக தமது உடலை குறைத்து கொண்ட பின்னரே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri
