முகமது சமிக்கு இந்திய அரசினால் உயரிய விருது
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் முகமது சமிக்கு அந்நாட்டு அரசினால் 'அா்ஜுனா விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவின் 82ஆவது கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற தமிழக செஸ் வீராங்கனை ஆா்.வைஷாலிக்கும் அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது.
டில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று(09) நடைபெற்ற தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளார்.
அா்ஜுனா விருது
இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் போட்டியாளா்கள், பயிற்சியாளா்கள், பங்களிப்பாளா்களுக்கு இந்திய மத்திய அரசு ஆண்டுதோறும் அா்ஜுனா விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான விருது பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி கிரிக்கெட் வீரா் முஹமது ஷமி, தமிழக செஸ் வீராங்கனை ஆா்.வைஷாலி உள்ளிட்ட 26 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |