பெயரை மாற்றிக் கொண்ட அர்ஜூன் மகேந்திரன்! அநுர வெளியிட்ட தகவல்
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன்(Arjuna Mahendran) தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் வசித்து வரும் அர்ஜூன் மகேந்திரன் இவ்வாறு பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பெயர் மாற்றம்
இந்த பெயர் மாற்றம் தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வியட்நாம் விஜயத்திற்கு முன்னதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் மகேந்திரனின் பெயர் மாற்றம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.