அர்ஜுன் அலோசியஸ் செலுத்தாத வரி நிலுவை
பெர்பெசுவல் ட்ரஷரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், சுமார் மூன்றரை பில்லியன் ரூபா அளவிலான வரி நிலுவையை இதுவரை செலுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது.
டப்.எம்.மெண்டிஸ் சாராய உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து அரசாங்கத்துக்குச் செலுத்தப்பட வேண்டிய மூன்றரை பில்லியன் ரூபா வட் வரிநிலுவையை செலுத்தத் தவறிய காரணத்துக்காக அர்ஜுன் அலோசியஸுக்கு எதிராக கடந்த ரணில் ஆட்சிக் காலத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அதன்பிரகாரம் வரி நிலுவையை செலுத்தத் தவறிய காரணத்துக்காக அர்ஜுன் அலோசியஸுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்க்கமான வழிகாட்டல்
தற்போது அர்ஜுன் அலோசியஸ் சிறைத்தண்டனையை முடித்து விடுதலையாகிவிட்டார். எனினும், இதுவரை அவர் குறித்த வட் வரித் தொகை நிலுவையைச் செலுத்தவில்லை என்று தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் மத்திய வங்கி என்பவற்றிடம் ஆலோசனைகள் கோரப்பட்டுள்ள போதும், இதுவரை அது தொடர்பில் தீர்க்கமான வழிகாட்டல் எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri