தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக எழுச்சி கொண்ட மலைநாடு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு (Ariyanethran) ஆதரவு தெரிவித்து மத்திய மலைநாட்டிலும் பிரசார கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பரப்புரை கூட்டமானது, இன்று (17.09.2024) இடம்பெற்றுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து பா. அரியநேத்திரனை தமிழ் பொதுவேட்பாளராக களமிறக்கினர்.
பிரசார கூட்டம்
செப்டெம்பர் 21ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் உட்பட பல்வேறு தரப்பினராலும் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, சில தமிழ் கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் தமிழ் தலைவர்கள் பொதுவேட்பாளர் தெரிவுக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்றைய தினம் மத்திய மலைநாட்டில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அனந்தி சசிதரன் சிறப்பு பேச்சாளராக பங்கேற்றதுடன் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.