சமூக விஞ்ஞான ஆய்வு மையமும் கடற்றொழிலாளர் பிரதிநிதிகளும் இணைந்து தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தொடர் பரப்புரை
தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளாலும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கு சார்பான தொடர் பரப்புரை இன்றைய தினம் கோப்பாய் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.
அதன்படி, ஆவரங்கால், புத்தூர், சிறுப்பிட்டி கோப்பாய், உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்றையதினம்(08) அதி தீவிரமாக பரப்புரை இடம்பெற்றுள்ளது.
தேர்தல் பரப்புரை
சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தலைமையில் இடம்பெற்றுவரும் பரப்புரையில் வட மாகாண கடற்றொழில் அமைப்பு பிரதிநிதிகளும், வடக்கு பிரஜைகள் அமைப்புக்களும் இணைந்திருந்தன.
இதேவேளை, நால்வர் வீடுவீடாக சென்று பரப்புரையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது ஐந்து பேர் வரை பரப்புரையில் ஈடுபட எந்த வித தடையும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக பவரல் அமைப்புக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.