பொதுக் கட்டமைப்பின் வெற்றியை பொருட்படுத்த முடியாத தென்னிலங்கை ஆதரவாளர்கள்
தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் வெற்றியை ஏற்றுக்கொள்ளமுடியாத சிலர் சமூகத்தில் பொய்யான அவதூறுகளை பரப்பி வருவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
பொது தேர்தல்
தமிழ் மக்கள் நடைபெறவுள்ள பொது தேர்தலில் அனைத்து தமிழ் தரப்புக்களையும் ஒன்றினையுமரான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும்.
நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்துக்கு கிடைத்த ஆதரவு என்பது தமிழ் தேசியத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
அதனை நாம் தமது கொள்கைகளை வென்றெடுக்க நடைபெறவுள்ள பொது தேர்தலிலும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
