இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் கடும் வாத பிரதிவாதங்கள்! வெற்றி யார் பக்கம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் ஆறு நாடுகள் முன்வைத்துள்ள யோசனை இன்றையதினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் இந்த வாத பிரதிவாதங்கள் தொடர்பான வாக்கெடுப்பு நாளைய தினம் நடத்தப்படவுள்ளது. GMT நேரப்படி ஒன்பது மணிக்கு இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தப்படும்.
ஆறு நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை இலங்கை முழுமையாக நிராகரித்துள்ளது. சீனா, ரஷ்யா, பிலிப்பின்ஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்த யோசனைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமை பேரவை 47 உறுப்பு நாடுகளை கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் ஆதரவும் இலங்கைக்கு கிடைக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 14 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam