ஹமாஸ் அமைப்பினரிடமிருந்து 90 வயது மூதாட்டியை காப்பாற்றிய பிரபல கால்பந்து வீரர்
தன்னை கடத்த வந்த ஹமாஸ் அமைப்பினரிடமிருந்து பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் பெயரை சொல்லி இஸ்ரேலில் வசிக்கும் 90 வயது மூதாட்டி தப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எஸ்தர் குனியோ (வயது 90) என்ற மூதாட்டி ஒருவரே இவ்வாறு சாதுர்யமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிகளுடன் நுழைந்த கும்பல்
இது குறித்து அந்த மூதாட்டி தெரிவிக்கையில், கடந்த அக்டோபர் மாதம் தன் வீட்டிற்குள் 2 பேர் துப்பாக்கிகளுடன் நுழைந்தனர். அப்போது நான் அர்ஜென்டினாவை சேர்ந்தவர் என கூறினேன்.
அதற்கு அர்ஜென்டினா என்றால் என்ன? என கேட்டனர். கால்பந்து போட்டியில் விளையாடும் பிரபல வீரர் மெஸ்ஸியின் சொந்த ஊர்தான் எனது ஊர் எனக் கூறினேன்.
A 90-year-old Argentine woman avoided being kidnapped by Hamas members in Israel thanks to mentioning Messi, which led one of the attackers to take a photo with her and then leave.
— All About Argentina ??? (@AlbicelesteTalk) March 7, 2024
The woman said: "I'm from where Messi is from..." Then the attacker took a photo with her and… pic.twitter.com/I4n32WeRap
அதனை கேட்டதும் அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியை என்னிடம் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடன் 'செல்பி' போட்டோ எடுத்தனர். மேலும் என்னை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டனர் என கூறியுள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேல் மீது காசாவின் ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7ஆம் திகதி முதல் தாக்குதல் நடத்தி வருவதோடு, இதற்கு இஸ்ரேல் படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதனால் காசா நகரில் பெரும் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 1,139 பேர் பலியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |