எம்பாபேயின் புகைப்படம் ஒட்டப்பட்ட சவப்பெட்டிக்கு தீ வைப்பு! சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜெண்டினா அணி
காத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியும் அர்ஜெண்டினா அணியும் மோதியிருந்ததுடன், பிரான்ஸ், ஆர்ஜெண்டினா இரண்டு அணிகளும் தலா 3 கோல் அடித்து பெனால்டியில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆர்ஜெண்டினா உலகக் கோப்பை பட்டத்தை வென்றதுடன், மெஸ்ஸி மற்றும் ஆர்ஜெண்டினாவின் வெற்றியை உலகின் அனைத்து மூலைகளிலும் கொண்டாடி வருகின்றனர்.
அவமதிப்பு செயல்கள்
இந்நிலையில், உலகக்கோப்பையை வென்ற ஆர்ஜெண்டினா அணி கண்ணியமற்ற முறையில் நடந்துகொள்வதாகவும், அவமதிப்பு செயல்கள் தொடர்பாக FIFA விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆர்ஜண்டினா அணியின் வெற்றிக்கொண்டாட்டத்தின் போது பிரான்ஸ் வீரர் எம்பாபேயின் உருவப்படம் தாங்கிய பொம்மை ஒன்றை ஆர்ஜண்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ் கைகளில் வைத்துக்கொண்டு அநாகரீகமான முறையிலும் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொருளாதார அமைச்சர் கண்டனம்
மேலும் எம்பாபேயின் புகைப்படம் ஒட்டப்பட்ட சவப்பெட்டி ஒன்றும் எரியூட்டப்பட்ட காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. மேற்படி செயல்களுக்கு பிரான்சின் பொருளாதார அமைச்சர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
எனவே ஆர்ஜண்டினாவின் கண்ணியமற்ற செயலை FIFA கண்டிக்க வேண்டும் என்றும் அத்துடன் அவமதிப்பு செயல் குறித்து விசாரணைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, உலக்கக்கிண்ண இறுதிப்போட்டியை மீள நடத்துமாறு 200,000 பேரின் கையெழுத்துடன் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உலக்கிண்ண இறுதிப்போட்டியை மீண்டும் நடத்துமாறு கோரிக்கை! ஆர்ஜெண்டினா அணிக்கெதிராக எழுந்துள்ள சர்ச்சை |