ஆர்ஜண்டினாவின் வெற்றியில் சந்தேகம்! - கிண்ணத்தை திரும்ப பெறுமாறு எழுந்துள்ள சர்ச்சை
காத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியும் அர்ஜெண்டினா அணியும் மோதியிருந்ததுடன், பிரான்ஸ், ஆர்ஜெண்டினா இரண்டு அணிகளும் தலா 3 கோல் அடித்து பெனால்டியில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஆர்ஜண்டினா அணி வெற்றி பெற்றதில் சந்தேகம் உள்ளதாகவும், வெற்றிக்கோப்பையை திரும்பப்பெற வேண்டும் எனவும் பிரான்ஸ் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ஜண்டினா அணிக்கான மூன்றாவது கோலினை 108 ஆவது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸினால் அடிக்கப்படும் முன்பு மேலதிக வீரர்கள் இருவர் மைதானத்துக்குள் இருந்ததாக பிரான்ஸ் ஊடகங்கள் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.
கிண்ணத்தை திரும்ப பெறுமாறு கோரிக்கை
உதைப்பந்தாட்ட விதிகளின் படி, கோல் ஒன்று அடிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் போட்டிகள் ஆரம்பிக்கப்படும் போது மேலதிக வீரர் மைதானத்துக்குள் இருப்பதை நடுவர் சரிபார்க்கவேண்டும். அதுவரை அவர்கள் மைதான கோட்டுக்கு வெளியே காத்திருக்க வேண்டும்.இருப்பினும் லியோனல் மெஸ்ஸியினால் கோல் அடிக்கப்படுவதற்கு முன்னரே மேலதிக வீரர்கள் இருவர் மைதானத்துக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோல் போடப்படுவதற்கு முன்னால் மேலதிக வீரர் மைதானத்துக்குள் நுழைந்தால், அந்த கோல் செல்லுபடியற்றதாகும். மெஸ்ஸி 108 ஆவது நிமிடத்தில் அடித்த கோல் நிராகரிக்கப்பட்டிருந்தால் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றிருக்கும் எனவும்,புகைப்பட ஆதாரங்களுடன் பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த கோல் வழங்கப்பட்டிருக்கக்கூடாது எனவும், ஆஜெண்டினாவின் வெற்றியில் சந்தேகம் உள்ளதாகவும், வெற்றிக்கிண்ணத்தை திருப்பி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.