விமான டிக்கட் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்
சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்வால், விமான டிக்கட்டின் விலை கணிசமாக உயரும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் எச்சரித்துள்ளது.
சங்கத்தின் தலைமை இயக்குனர் வில்லி வால்ஷ், உக்ரைன் ரஷ்யா நெருக்கடி இன்னும் முடிவுக்கு வராததும் இதற்கு ஒரு காரணம் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில மாதங்களில் வடக்கு அரைக்கோணத்தில் குளிர்காலம் வருவதால், விமான டிக்கட் விலை கணிசமாக அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே உலகின் பல நாடுகளிலுள்ள விமான நிலையங்களில் விமானங்கள் இரத்துச் செய்யப்படுவது அதிகரிக்கும் என்று வில்லி வால்ஷ் கணித்துள்ளார்.
போதிய எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாமையே இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது உட்பட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

குக் வித் கோமாளி சீசன் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு தகவல்.. திடீரென நடந்துள்ள மாற்றம், என்ன தெரியுமா? Cineulagam
