மந்தை காடுகளான மக்களின் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும்:திலீபன் எம்.பி வலியுறுத்து (VIDEO)
மக்களால் பயன்படுத்தப்பட்டு மந்தை காடுகளாக உள்ள இடங்களை விடுவிக்க வேண்டும் என வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (16.08.2023) இடம்பெற்றிருந்தது.
குறித்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
காணி விடுவிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள திணைக்களத்திற்கு சொந்தமான அதாவது மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பான கூட்டம் இன்று இடம்பெற்றிருந்தது.
இதில் ஓரளவு திருப்தியாக உள்ளது. ஓரளவெனில் 35 வீதமே என்னால் திருப்தி கொள்ள முடியும்.காரணம் ஜனாதிபதியின் இந்த திட்டமானது 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள திணைக்களம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான குறித்த திட்டமானது கிராம மக்கள் வரை சென்றடையவில்லை.
இதற்கான காரணம் ஜனாதிபதியின் இந்த திட்டமானது 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள திணைக்களம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான குறித்த திட்டமானது கிராம மக்கள் வரை சென்றடையவில்லை. கூகிள் வரைபடத்தை வைத்தே இந்த திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
முப்பதாயிரம், நாற்பதாயிரம் ஏக்கர்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற அந்த இடங்கள் அனைத்தும் ஏற்கனவே மக்கள் வாழக்கூடிய பகுதி. நாம் கேட்ட விடயம் ஏற்கனவே மக்களால் பயன்படுத்தப்பட்டு மந்தை காடுகளாக உள்ள இடங்களை விடுவிக்க வேண்டும் என்கின்ற கருத்தினை முன்வைத்திருக்கின்றோம்.
கைது நடவடிக்கை
ஜனாதிபதியிடமும் இந்த விடயங்களை முன்வைத்திருக்கின்றோம். அதேபோல் மத்திய தர வகுப்பு காணி பிரதேச செயலகத்திற்கு சொந்தமான காணி. ஆனால் அந்த மத்தியதர வகுப்பு காணிகளை துப்பரவு செய்கின்ற போது வனவள திணைக்களம் கைது நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. அது ஒரு தீர்மானமாக எடுக்கப்பட்டது.
மேலும்,மக்கள் பிரதிநிதிகள் என்ற
வகையில் நாம் முன்வைக்கப்பட வேண்டிய பிரச்சினைகள், அதேபோல் கிராம மட்டங்கள்
தோறும் கிராம சேவையாளர் ஊடாக இந்த தரவுகள் திரட்டப்பட வேண்டும் என்ற
கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.” என
தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
