பிரித்தானியாவில் அதிக கோவிட் - 19 ஆபத்துள்ள பகுதிகள்! - வெளியான அறிவிப்பு
பிரித்தானியாவில் இன்றைய தினம் 29,612 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், அங்கு கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,146,800 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 104 ஆக பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், வேல்ஸின் இன்றைய புள்ளிவிவரங்கள் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 130,607 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், நாடு முழுவதும் 186 புதிய பகுதிகளில் கோவிட் தொற்று வேகமாக அதிகரித்து வருவதால், கோவிட் ஆபத்து நிறைந்த ஐந்து புதிய இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 146 கோவிட் மரணங்கள் பதிவாகியிருந்தன. பிரித்தானியாவில் கடந்த ஐந்து மாதங்களில் பதிவான அதி கூடிய நாளாந்த கோவிட் மரணங்கள் இதுவாகும்.
இந்நிலையில், ஆகஸ்ட் 6ம் திகதி வரையிலான ஏழு நாட்களில் 40 சதவிகித பகுதிகள் கோவிட் வழக்குகளின் வீழ்ச்சியைக் கண்டன. எனினும், 59 சதவிகித பகுதிகளில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மிட்லாண்ட்ஸில் உள்ள லிங்கன் பகுதி அதிக நோய்த்தொற்று விகிதங்களைக் கொண்டுள்ளது, அங்கு ஆகஸ்ட் 6ம் திகதி முதல் ஏழு நாட்களில் 617 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 100,000 மக்களுக்கு 621.4 க்கு சமம்.
எக்ஸிடெர் இரண்டாவது மிக உயர்ந்த விகிதத்தைக் கொண்டுள்ளது. அங்கு 790 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளதுடன் 541.1 முதல் 601.2 வரை வீதத்தை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹல் மூன்றாவது இடத்தில் இருப்பதுடன், 1,507 புதிய வழக்குகளுடன் 512.7 முதல் 580.1 வரையான வீதத்தை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மூன்று பகுதிகளிலும் நோய்த்தொற்றுகள் அதிக விகிதத்தில் இருந்தாலும், கடந்த வாரத்தில் வழக்குகளில் பெரிய அதிகரிப்பு காணப்பட்ட ஐந்து இடங்கள் உள்ளன.