கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கண்டறியப்பட்ட கொழும்பிலுள்ள பகுதிகள் முடக்கம்!
கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கண்டறியப்பட்ட கொழும்பில் உள்ள பகுதி முடக்கப்பட்ட நிலையில் உள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சனிக்கிழமை முதல் இந்தப் பகுதி முடக்கப்பட்ட நிலையில் இருப்பதாக கொழும்பு மாநகர பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தினுகா குருகே தெரிவித்தார்.
கொழும்பில் இந்த மாறுபாடு பரவுகிறது என்ற சந்தேகம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் அந்த பகுதியில் எழுந்தமான பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்று அவர் கூறினார்.
இந்தநிலையில் பொரல்ல மற்றும் கொழும்பு நகரத்தின் பிற பகுதிகளில் தொற்று அறிகுறி உள்ளவர்கள் தமது எழுந்தமான பி.சி.ஆர் சோதனை தளங்களுக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை கொழும்பின் தெமட்டகொட பகுதியில் பெறப்பட்ட ஐந்து மாதிரிகளிலிருந்து அதிக அளவில் பரவும் பி .1.617.2 "டெல்டா" மாறுபாடு கண்டறியப்பட்டதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வைத்தியர் சந்திமா ஜீவந்தர முன்னதாக கூறியிருந்தார்.
அதேநேரம் இலங்கையில் உள்ள சமூகத்தினரிடமிருந்து கோவிட் தொற்றின் இந்திய மாறுபாடு கண்டறியப்பட்ட முதல் நிகழ்வு இது என்று பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் கூறினார்.
கோவிட் மாறுபாடு பி 117 மாறுபாட்டை விட டெல்டா மாறுபாடு 50% வேகமானது மற்றும்
அதிக அளவில் பரவக்கூடியது என்று சந்திமா ஜீவந்திரா தெரிவித்துள்ளார்.

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அர்த்திகாவின் புதிய தொடர்.. சன் டிவியில் விரைவில், ஹீரோ யார் தெரியுமா? Cineulagam

ஆசிய நாடுகள் உட்பட... சில நாட்டவர்களின் விசா அனுமதியைக் கட்டுப்படுத்த பிரித்தானியா முடிவு News Lankasri
