நீங்கள் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவரா? கடுமையாக்கப்படுகிறது சட்டம்
கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்த, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் தேவையான சட்ட வரைபுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் மருத்துவ தொழிநுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டின் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் உள்ள 70 தீவிர சிகிச்சை கட்டில்களில், தற்போது 52 கட்டில்கள் கோவிட் வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த காலத்தை விட தற்போது ஒக்சிஜன் வழங்க வேண்டியுள்ள கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியும், ஆனால் இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடனும் பாதுகாப்புடன் இருப்பது மிகவும் முக்கியம்.
கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்த, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் தேவையான சட்ட வரைபுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.
அரசுடன் பேச எந்த நேரமும் தயார்! - சம்பந்தனின் அறிவிப்பு (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan