நீதிமன்றின் உதவியுடன் 1000 ரூபா சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கின்றனவா கம்பனிகள்?
நீதிமன்றின் உதவியுடன் ஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க வேண்டுமென அண்மையில் சம்பள நிர்ணயசபை அறிவித்திருந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினைக்கு பல்வேறு வழிகளில் தீர்வு காண்பதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.
சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என ஆங்கில ஊடகமொன்று பெருந்தோட்ட நிறுவன ஒன்றியத்தின் பேச்சாளர் ரொசான் ராஜதுரையிடம் கேள்வி எழுப்பிய போது, அதற்கு அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் பல்வேறு வழிகளில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்ட நிறுவனங்கள் பாரியளவு நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகவும், இதனால் கடுமையான செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயிரம் ரூபா கொடுக்க முடியாத நிலையில் யாரேனும் ஆயிரம் ரூபா கொடுக்கச் சொன்னால் அதனை எவ்வாறு செய்வது என்பதனையும் அவர்களே விளக்க வேண்டுமென ராஜதுரை சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
