நாட்டில் சுகாதார வழிகாட்டுதல்கள் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா?
நாட்டை திறப்பதன் மூலம் சுகாதார வழிகாட்டுதல்கள் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை அந்தந்த பிரிவுகள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று கோவிட் கட்டுப்பாடு குறித்த சிறப்பு குழு வலியுறுத்தியுள்ளது.
ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டவுடன் பொது மக்களின் ஒன்றுகூடல்கள் நிகழும் போது, கோவிட் தொற்றுநோய் பரவும் அபாயம் மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பது அவசியம்.
எனவே, வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களைக் கவனிக்க வேண்டியதன் அவசியத்தை சுகாதார அமைச்சு வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கோவிட் கட்டுப்பாடு குறித்த சிறப்பு குழுவின் இணையக்கூட்டத்தில், இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 95% இரண்டு மருந்துகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி மற்றும் 12 முதல் 19 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில், கோவிட் குறித்த சிறப்பு குழு, தடுப்பூசிகள் தொடர்பில் விரிவான கணக்கெடுப்பை விரைவில் நடத்த முடிவு செய்தது.
அத்துடன் சுற்றுலா மற்றும் பொருளாதார துறைகளின் முன்னேற்றத்திற்கு எடுக்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்தும் நீண்ட விவாதம் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 37 நிமிடங்கள் முன்

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam
