பசிலை சந்திக்க மறுத்த தீவிர ஆதரவாளர் : ரணில் கூறியதால் இணக்கம்
ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் இந்த மாதத்தில் பேரணிகளை நடத்த ஐக்கிய தேசியக்கட்சி திட்டமிட்டுள்ளது.
இதன்போது பொஜன பெரமுனவின் அதிருப்தியாளர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அதிருப்தியாளர்கள் என்போருடன் இணைந்து பிரசாரங்கள் முன்னெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் குறிப்பாக பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் பிரசன்ன ரணதுங்க, செஹான் சேமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே, மற்றும் நிமால் லன்சா ஆகியோர் வெளிப்படையாகவே ரணிலுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர்.
எனினும் பலர் இரண்டு பக்கங்களுக்கும் நடுவில் இருந்து செயற்படுகின்றனர்.
இதில் ஒருக்கட்டமாக, அமைச்சர் ரணதுங்க மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் அண்மையில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை தேடும் வகையில் மதுபான விருந்து ஒன்றை நடத்தியிருந்தனர்.
ரணிலுக்கான ஆதரவு
செஹான் சேமசிங்க, அனுரதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பிரசாரக்கூட்டத்துக்கு செல்லாத நிலையில். ரணிலுக்கான ஆதரவை உறுதிப்படுத்தியிருந்தார்.
நிமல் லன்சா ரணிலுக்காகவே தமது நெருங்கிய நண்பரான பசிலை எதிர்த்து களமிறங்கியுள்ளார்.
இந்தநிலையில் நிமல்; லன்சாவுக்கும் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தபோதும் லன்சா முதலில் அதற்கு மறுப்பு வெளியிட்டிருந்தார்.
எனினும் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டதற்கு அமைய, அவர் பசிலை சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இருப்பினும் ரணிலை ஜனாதிபதியாக்கும் தமது கொள்கையில் மாற்றம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்புக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் வஜிர அபேவர்த்தன ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இல் இணையுங்கள் JOIN NOW |