பெரும் பரபரப்புக்கு மத்தியில் கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் அர்ச்சுனா எம்.பி
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், கொழும்பு நீதிமன்றத்திற்கு பதற்றத்துடன், அர்ச்சுனா எம்.பி வருகை தந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (04.09.2026) காலை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையான நாமல் ராஜபக்சவிடம் சுமார் ஐந்து மணி நேரம் விசாரணை முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றம் வரை வந்த அர்ச்சுனா
இதனையடுத்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, நாமல் ராஜபக்சவை எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு அவசர அவசரமாக சென்ற காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது.