தமிழகத்தில் ஈழ மக்களின் வலிகளை மறந்து செயற்பட்ட அர்ச்சுனா..! சண் மாஸ்டர் குற்றச்சாட்டு
அர்ச்சுனா எம்.பி கூட்டத்திற்கு வருவார் என்றால், நான் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க மாட்டேன். அதே போன்று அவருடைய பெயரை கூட உச்சரிக்க எனக்கு விருப்பம் இல்லை என சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழ் ஊடகத்தின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வெளிச்சத்திற்கு வரும் அர்ச்சுனாவின் சுயரூபம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூர்ந்து தமிழ்நாடு - சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு அர்ச்சுனா வருகிறார் என தெரிந்திருந்தால் நிகழ்விற்கே வந்திருக்க மாட்டேன். அத்துடன், அர்ச்சுனா எம்.பி கடந்த 10 நாட்களுக்கு முன்னர் காணி பிரச்சினையொன்றில் என்னுடைய பெயரை இழுத்திருப்பதாக நான் கேள்விபட்டேன். எல்லாக்கட்சிகளுடனும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாகும்.
இவரை போன்று என்னால் அரசியல் செய்ய முடியாது. இன்று(18) முள்ளிவாய்க்கால் நினைவு தினம் எங்களுடைய மண்ணில் அனுஷ்டிக்கப்படும் அதே சமயம் எமது மண்ணில் இருந்து வந்துள்ளேன் என கூறிக் கொண்டு இவ்வாறு நடந்து கொள்வது வேதனையளிக்கின்றது என்றார்.
சென்னையில் இடம்பெற்ற நிகழ்வில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்காப்பியன் திருமாவளவன், அர்ச்சுனா இராமநாதன், சென்னையில் வசிக்கும் ஈழத்தைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர், விடுதலைச் சிறுத்தை கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இது போன்று பல விடயங்களை எமக்காக பகிர்ந்து கொண்டுள்ளார் சண் மாஸ்டர், இது தொடர்பான மேலதிக விவரங்களை காணொளியில் காணலாம்.
மேலதிக தகவல் - கஜி
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri