அர்ச்சுனா பிணையில் செல்ல அனுமதி : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
புதிய இணைப்பு
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மல்லாகம் நீதிமன்றத்தில் அர்ச்சுனாவை இன்றையதினம் (29.04.2026) முற்படுத்திய போதே அவருக்கு பிணை வழங்க நீதவான் உத்தரவு வழங்கியுள்ளார்.
தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29.04.2026) மல்லாகம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்
இளவாலை பொலிஸாரால் கடந்த 27 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இன்று (29) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
துப்பாக்கியால் அச்சுறுத்திய குற்றச்சாட்டில்

கடந்த 25 ஆம் திகதி யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் காணித் தகராறு காரணமாக பெண் ஒருவரை துப்பாக்கியால் அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
you may like this







இமயமலைக்கு அடியில் பிளவுபட்டு கொண்டிருக்கும் இந்திய தட்டு- புதிய புவியியல் கண்டுபிடிப்பு News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சீரியல்கள் நேரம் மாற்றமா?... எந்தெந்த தொடர்கள் தெரியுமா, முழு விவரம் Cineulagam