என்னை சுட்டு வீழ்த்துங்கள்! சபையில் அர்ச்சுனா எம்.பி இன்றும் ஆவேசப் பேச்சு

Parliament of Sri Lanka Sri Lanka Government National People's Power - NPP Ramanathan Archchuna
By Benat Jan 23, 2025 04:14 PM GMT
Report

என்னை இந்த அரசாங்கம்  புலி, புலி என்று அடையாளப்படுத்துகின்றது. இப்படி கூறி ஏன் மன உளைச்சலுக்கு என்னை உள்ளாக்குகின்றீர்கள். என்னை விடுதலைப் புலியாக கருதினால் என்னை கைது செய்யுங்கள். இல்லையென்றால் சுட்டு வீழ்த்துங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் படுகொலைகளை செய்துள்ளது.  படுகொலை செய்து வந்த அரசாங்கம் தான் இது என்றும் அவர் தெரிவித்தார். 

1980ஆம் ஆண்டுகளில், எவ்வளவு மக்களை ஆட்சிக்கு வந்துள்ள இந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்துள்ளார்கள். பல படுகொலைகளை செய்த தரப்பு இது என்றும், முடிந்தால் தன்னையும் கொலை செய்து விடுமாறும் தெரிவித்த அர்ச்சுான எம்.பி யுத்தத்தின்போது இலட்சக்கணக்கான தமது மக்கள் முள்ளிவாய்க்காலில் வைத்து கொலை  செய்யப்பட்டுள்ளார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார். 

அரசாங்கத்திற்கு வழங்கிய முழு ஆதரவினையும் இன்றிலிருந்து முழுதுமாக மீளப் பெற்றுக் கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.  

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்று வரும் அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 


64 நாட்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கதைப்பதற்கு இடம் கொடுக்காவிட்டால் அது இந்த அரசாங்கத்தினுடைய வெட்கம்கெட்ட செயல். ஏன் இவர்கள் பயப்படுகின்றார்கள். எனக்கு கதைப்பதற்குரிய நேரத்தை வழங்கவில்லை என்று கேட்டால் அதற்கு ஒரு குழுவினை நியமித்துள்ளனர். நான் பல நாட்கள் காத்திருந்துள்ளேன். இது எந்த வகையில் நியாயம்.

நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கு 36 நாட்கள் கதைப்பதற்கு அனுமதி வழங்காமல் முதலாவது நாளாக நான் உரையாற்றுவதற்கு கூட எனது சொந்த பிரச்சினையைப் பற்றி பேசுவதற்கான அவசியத்தை இந்த அரசாங்கம் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

இன்றில் இருந்து இந்த அரசாங்கத்திற்கு எனது மனதால் நான் கொடுக்கின்ற அனைத்து ஆதரவுகளையும் மீளப் பெற்றுக் கொள்கின்றேன். இன்றில் இருந்து உண்மையான எதிர்க்கட்சியாக நான் செயற்படுவேன்.

எனக்கு எதிராக 24 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வாகனத்தின் முன் விளக்குகளை ஒளிரவிட்டதற்காக கைது செய்கிறார்கள். ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் இது நடக்குமா. இந்த விடயத்தை நான் பாரிய கவலையுடன் நான் முன்வைக்கின்றேன்.

மிகப் பெரிய எதிர்பார்ப்பு இந்த தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் மீது இருந்தது. யாழ்ப்பாணத்து மக்கள் பாரிய எதிர்பார்ப்பில் மூன்று எம்.பிக்களை தெரிவு செய்திருக்கின்றார்கள். ஆனால் எனக்கு இங்கு கதைப்பதற்கு கூட நேரம் கொடுக்கப்படுவதில்லை.

இங்கு தமிழ் சிங்கள மக்கள் ஒன்றாக வாழ வேண்டும் என்றால் உயரிய சபையான நாடாளுமன்றத்தில் உண்மையான விடயங்களை கதைப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட வேண்டும். ஏன் இந்த அரசாங்கம் ஒரு சுயேட்சைக் குழு உறுப்பினரைப் பார்த்துப் பயப்படுகின்றது. இந்த அரசாங்கத்திற்கு முதுகெழும்பு இருந்தால் இன்றில் இருந்து இந்த பிரச்சினையை முடித்துக் காட்டுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

நாடாளுமன்றிக்கு சிக்கலாக மாறியுள்ள அர்ச்சுனாவின் சிறப்புரிமை!

நாடாளுமன்றிக்கு சிக்கலாக மாறியுள்ள அர்ச்சுனாவின் சிறப்புரிமை!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு விரைவில்.. பிரதமர் உறுதி

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு விரைவில்.. பிரதமர் உறுதி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US