சபையில் கண்ணீர் சிந்திய அர்ச்சுனா..!
சபையில் தனது தந்தை குறித்து உரையாற்றும் போது, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கண்ணீர் சிந்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய அமர்வில் உரையாற்றிய இராமநாதன் அர்ச்சுனா,
“எனது தந்தைக்கு மயக்க மருந்து இல்லாமல் காலில் அறுவை சிகிச்சை செய்தனர்.
காணாமல் போன தந்தை
புதுமாத்தளன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது, அங்கு நடந்த தாக்குதலில் அவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர் மீண்டும் பதவியா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்ட போது, நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். அங்கிருந்து எனது தந்தையை காணவில்லை.
அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமைக்கான பதிவும் இருக்கவில்லை. இன்று அவர் உயிருடன் இருப்பதாக இருந்தால் நான் மகிழ்ச்சியடைய மாட்டேன்.
கண்ணீர் சிந்திய அர்ச்சுனா
அப்படியாயின், அவர், இராணுவ முகாம்களில் 10, 15 வருடங்கள் சித்திரவதையை அனுபவித்திருப்பார்.

எனக்கு எனது தந்தைக்கு என்ன நடந்தது என்பது தெரிய வேண்டும். அவரால் தான் நான் இன்று இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உரையாற்றும் போது அர்ச்சுனா கண்ணீர் சிந்தியமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam