தமிழர் பகுதியில் அவசரமாக இடப்பட்ட தொல்பொருள் அறிவித்தல் பலகை..!
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேச பிரிவில் உள்ள தாந்தாமலை முருகன் ஆலயத்தில் செல்லும் வீதிகளில் இரு இடங்களில் அறிவித்தல் பலகை இடப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தல் பலகைகள், இன்றையதினம் (20.11.2025) இடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் தாந்தாமலை தொல்லியல் இடம் என மூன்று மொழிகளாலும் எழுதப்பட்ட அறிவித்தல் பலகை தாந்தாமலை செல்லும் நாற்பது வட்டை சந்தியில் முருகன் ஆலயத்தை அம்புக்குறி காட்டி இடப்பட்டுள்ளது.
சந்தேகம்
மற்றைய அறிவித்தல் பலகை தாந்தாமலை முருகன் ஆலத்துக்கு அண்மையில் உள்ள பொலிஸ் சாவடி நிலைய சந்தியில் தாந்தாமலை முருகன் ஆலயத்தை அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ளது.

திருகோணமலையில் அத்துமீறி கடந்ந நவம்பர் 16 அன்று புத்தர் சிலை வைக்கப்பட்டு சரியாக மூன்று தினங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பெருநிலத்தில் இந்த விளம்பரப்பலகையிடப்பட்டுள்ளமை பௌத்த விகாரைகளை நிறுவும் திட்டமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |