இலங்கையில் மீண்டும் அமைதியற்ற நிலை! தவறான வரலாற்று சம்பவத்திற்கு அழைப்பு (Video)
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் உடல் விக்ரமசிங்க மலரஞ்சலி சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைதியற்ற வரலாற்று சம்பவத்திற்கு அழைப்பு விடுப்பதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு திறைச்சேரியின் செயலாளர், அரச அச்சகத் திணைக்களத்தின் தலைவர் தடையாக செயற்படுகிறார்கள் என குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் உடல் விக்ரமசிங்க மலர்சாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளமை தெளிவாகியுள்ளது.
ஜனநாயகத்திற்கு முரணாக செயற்படும் போது ஏற்படும் பாரிய விளைவுகள் தோற்றம் பெற்றுள்ளன. இதற்கு பல சம்பவங்கள் எடுத்துக்காட்டாக காணப்படுகின்றன.
நாட்டு மக்களின் அடிப்படை வாக்குரிமை பிற்போட்டதன் பின்னணியில் தான் நாட்டில் யுத்தம் தோற்றம் பெற்றது என்பதை எவரும் மறக்க முடியாது.
வடக்கு மக்களின் வாக்குரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதை தொடர்ந்து ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்றது. இதற்கு ஐக்கிய தேசிய கட்சியே தலைமை தாங்கியது.
நாட்டில் மீண்டும் அமைதியற்ற தன்மையை தோற்றுவிக்கும் செயற்பாடுகளை ஜனாதிபதி தற்போது முன்னெடுத்துள்ளார். தவறான வரலாற்று சம்பவத்திற்கு மீண்டும் அழைப்பு விடுக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இவ்வாரத்திற்கான அரசியல் பார்வை விசேட தொகுப்பு,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
