அலரி மாளிகையின் முன் நிறுத்தப்பட்ட பொலிஸ் மற்றும் இராணுவ வண்டிகள்: தொடரும் போராட்டம் (Video)
அரசாங்கத்திற்கு எதிராக இன்று நான்காவது நாளாகவும் தொடர்ச்சியாக அலரி மாளிகையின் முன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தொடர்ந்து மூன்று நாட்களாக அலரி மாளிகையின் உள்ளே இருந்து பிரித் ஓதும் சத்தம் கேட்டு கொண்டிருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதனால் தங்களுக்கு அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு கோசங்களை எழுப்ப முடியாத நிலையே காணப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
தாங்கள் எழுப்பும் எதிர்ப்பு கோசங்கள் உள்ளே விலக்காமல் இருப்பதற்காகத்தான் இவ்வாறான முறை கையாளப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் இப் பகுதியில் அதிகளவில் ஆர்ப்பாட்டங்காரர்கள் இணைந்து விடக்கூடாது என்பதற்காக பொலிஸ் மற்றும் இராணுவ வண்டிகள் இப்பகுதிகளில் அதிகளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டங்காரர்கள் அவ்வண்டிகளில் கயிறுகளை கட்டி தங்களுக்கான கூடாரங்களை அமைந்தும் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதியில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும்,
அத்துடன் இப்பகுதியில் செல்லும் வாகனங்கள் ஒலி எழுப்பி தங்களது ஆதரவினையும் தெரிவிப்தோடு
ஆர்ப்பாட்டகாரர்களுக்கு தண்ணீர் போத்தல்கள் மற்றும் உணவுகளையும் வழங்கி செல்வதாகவும்
எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.



