சிறப்பாக நடைபெற்ற அராலி ஞான பைரவர் ஆலய கும்பாபிஷேகம்
அராலி வடக்கு நாகேந்திரமடம் புளியடி ஸ்ரீ ஞான பைரவர் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, இன்றையதினம் (12.6.2024) காலை மணி 11.00 முதல் நண்பகல் 12.00 மணிவரை இடம்பெற்றுள்ளது.
குரோதி வருடம் வைகாசி மாதம் 27ம் நாள் (09.06.2024) ஞாயிறு அதிகாலை
சூர்யோதயத்தில் கர்மா ஆரம்பமானது. அந்தவகையில் இன்றையதினம் கும்பாபிஷேகம் வெகு
சிறப்பாக நடைபெற்றது.
கருங்கல் ஆலயம்
இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் விநாயகர்த்தா, திருக்கையிலை மணி பிரம்மஸ்ரீ R. சிவஸ்வாமிசாஸ்திரி குருக்கள் தலைமையிலான குழுவினரால் இந்த கும்பாபிஷேக நிகழ்வு நடாத்தி வைக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக நிகழ்வில் பசு, குதிரை, யானை ஆகியன பூஜை வழிபாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன், இந்த ஆலயமானது பல கோடி ரூபா செலவில் முழுவதும் கருங்கல்லினால் அமைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |