இலங்கையில் போராட்டக்காரர்களுக்கான செய்தி
இலங்கையில் போராட்டக்காரர்கள் தமது போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான புதிய இடம் விரைவில் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இன்றைய தினம் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இளைஞர்களுக்கு தமது போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக புதிய இடமொன்று விரைவில் வழங்கப்படும்.
புறக்கோட்டையில் மிதக்கும் சந்தையை ஒட்டிய இடம்
புறக்கோட்டையில் உள்ள மிதக்கும் சந்தையை ஒட்டிய இடம் விரைவில் அரகலயவுக்கு (போராட்டத்திற்கு) வழங்கப்படும். இந்த இடத்தில் பல்வேறு வசதிகள் இருக்கும்.
போராட்டங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் திறமை மற்றும் ஆற்றல் மிக்கவர்கள். அவர்களின் திறன்களை மேலும் மேம்படுத்த இந்த புதிய மையம் உதவும்.
ரணிலிடம் கையளிக்கப்படவுள்ள திட்டங்கள்
எனவே இந்த இடத்தை, இந்த நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் விரைவில் கையளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அண்மையில் ஜனாதிபதி விக்ரமசிங்கவைச் சந்தித்த அரகலய இளைஞர்கள் சிலர், தமது போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மிதக்கும் சந்தைக்கு அருகில் இடம் ஒதுக்கும் நடவடிக்கையை வரவேற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)