காலிமுகத்திடல் போராட்டக்கள செயற்பாட்டாளர் மீது கத்திக்குத்து தாக்குதல்! உடல்நிலை குறித்து வெளியான தகவல்
கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர் டிலான் சேனநாயக்கவின் உடல் நிலை தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி அவரது உடல் நிலை தேறிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர் டிலான் சேனநாயக்க கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுகேகொடை பகுதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவத்தையடுத்து டிலான் சேனநாயக்க களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகள் முன்னெடுப்பு
பாகொட வீதியில் உள்ள டிலானின் வீட்டிற்கு சென்ற இருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதலின் போது சேனாநாயகவின் கால் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 7 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
