மின் கட்டணத்தை குறைக்க முடியாது: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல்
இலங்கை மின் பாவனையாளர்கள் ஜனவரி மாதம் மின்சார கட்டணத்தில் நிவாரணத்தை எதிர்பார்க்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ இத்தகவலை தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை (23.1.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்துக் கணிப்பு
மின்கட்டண திருத்தம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மின்சாரக் கட்டணத்தை திருத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கை ஒன்று இருப்பதாகத் தெரிவித்த அவர், எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படும்.
எனவே, மின் பாவனையாளர்கள் ஜனவரி மாதம் மின்சார கட்டணத்தில் நிவாரணத்தை எதிர்பார்க்க முடியாது எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் மக்கள் கருத்துக் கணிப்பு இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
