இந்தியாவில் மேலுமொரு தடுப்பூசிக்கு ஒப்புதல்
இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு, நாட்டின் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
அவசர கால பயன்பாட்டிற்காக சைடஸ் கெடிலா நிறுவனத்தின் (ஸிகோவ்)Zycov-D என்ற கோவிட் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், சீரம் இன்ஸ்ட்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்ட் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, அமெரிக்காவின் ஜோன்சன் & ஜோன்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் மரபணு தடுப்பூசியான Zycov-D,. 12 அகவை மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும் பயன்படுத்தலாம் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam