மலையகம் 200 கொண்டாடுகின்ற சிலரின் விசமத்தனமான பிரசாரங்கள் கண்டிப்புக்குரியது! சிவ ஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா
மலையகம் 200 கொண்டாடுகின்ற ஒரு சிலர் விசமத்தனமான பிரசாரங்களை செய்து வருகிறார்கள். அதனை மலையக இந்து குருமார்கள் ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றது என மலையக இந்து குருமார்கள் ஒன்றியத்தின் ஸ்தாபகர் சிவ ஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா தெரிவித்துள்ளார்.
மலையக இந்து குருமார்கள் ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (18.08.2023) கொட்டகலை கொமர்ஷல் புதிய நகர் ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய பிரதான அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
200 வருட நிறைவு
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“மலையக மக்களை,மலையக இந்து குருமார் ஒன்றியம் ஒரு போதும் புறந்தள்ளி செயப்படாது. ஏனென்றால் மலையக இந்து குருமார்கள் 24 மணித்தியாலங்களும் 365 நாட்களும் தோட்டப்புறத்தில் அமைந்துள்ள ஆலயங்களில் இருந்து கொண்டு செயப்படுகின்றனர்.
அவர்கள் அன்றாடம் தேயிலை மலையில் உழைத்து பெறுகின்ற வேதனத்திலேயே குருமார்களின் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அத்தோடு அவர்களுடைய நன்மை தீமைகளிலும் இன்ப துன்பங்களிலும் ஏனையோர்களை விட அக்கறையும் ஆர்வமும் மலையக பகுதியில் வாழும் இந்து குருமார்களுக்கு இருக்கின்றது.
பாராட்டு நிகழ்வு
மலையகம் 200 ஐ அடிப்படையாக கொண்டு மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் 18 வருட பூர்த்தியினை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
ஆகவே மலையகத்தின் உயர்வுக்காக பல்வேறு வழிகளில் ஒத்தாசை நல்கியவர்களையும்,மலையக மேம்பாட்டுக்காக பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களையும் கௌரவிப்பதற்கான ஏற்பாடுகளை மலையக இந்து குருமார்கள் ஒன்றியம் அன்றைய நாளில் உரிய கௌரவத்தினை மலையக மக்களுக்காக நடாத்தும்.
இந்த விடயத்தில் எவரும் எங்களுக்கு பாடமெடுக்க தேவையில்லை.” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



