நாடாளுமன்றின் அவைத் தலைவராக சுசில் பிரேமஜயந்த நியமனம்
நாடாளுமன்றின் அவைத் தலைவராக சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு நாடாளுமன்றில் பதவி நிலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் அவைத் தலைவராக பிரதமர் தினேஷ் குணவர்தன கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஆளும் கட்சியின் பிரதம கொறடா பதவிக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
செயலாளர்கள் நியமனம் தொடர்பில் வர்த்தமானி
28 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நிதி அமைச்சின் செயலாளராக கே.எம்.எம்.சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளதுடன், வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை கமல் குணரத்ன பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
