வவுனியா மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு!
வவுனியா மத்தியஸ்த சபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள தவிசாளர், உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வானது நடைபெற்றது.
வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மத்தியஸ்தர் சபையின் பயிற்சிவிப்பாளர் செல்லத்துரை விமலல்ராஜ் தலைமையில் நேற்றையதினம் (26.06.2025) வவுனியா பிரதேச செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன் கலந்து கொண்டு புதிதாக தெரிவு செய்யப்பட்ட மத்தியஸ்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
நியமன கடிதங்கள்
புதிய தவிசாளராக நந்தகுமார் சசிகலா நியமிக்கப்பட்டார்.
இதன்போது வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன் கருத்து தெரிவிக்கையில், வவுனியா பிரதேச செயலக மத்தியஸ்த சபைக்கு அதிகமான பிணக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சரியான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டே இவ் மத்தியஸ்த சபை நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததார்.
அத்துடன், காணி தொடர்பான பிணக்குகளே அதிகமாக காணப்படுவதாகவும், காணி தொடர்பான ஆவணங்கள் சரியாக காணப்படாமையால் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் அதிகளவான பிணக்குகள் தற்போது காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், நீதிமன்றம் செல்லும் முன்னர் மத்தியஸ்த சபை செயற்பாட்டை மக்கள் நாடுவதால் நடுநிலைமை மாறாத தன்மையை பேண வேண்டும் எனவும், அவர்களுக்கான நியாயமானதும் நீதியானதுமான அவர்கள் நலன் சாா்ந்த விடயங்களை கவனத்தில் கொண்டு இணக்கம் வழங்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உரியது எனவும் தெரிவித்தார்.
புதிய நியமனம்
பொருளாதார வலுவிழந்தவர்களையும் அவர்கள் தன்மையை விடுத்து விடயத்தை சரியான முறையில் அணுக வேண்டும் எனவும் தெரிவித்ததுடன், மத்தியஸ்த சபை நியமனங்களை பெற்றுக் கொண்ட உத்தியோகத்தர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மத்தியஸ்த சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் உட்பட 16 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார்.
இந் நிகழ்வில் கடந்த மத்தியஸ்த சபை உறுப்பினர்கள், புதிதாக நியமனம் பெற்ற தவிசாளர் உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், மத்தியஸ்த சபை மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் மற்றும் மாவட்ட செயலக பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.













இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri
