பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் அரசியலமைப்பு பேரவை ஆலோசனை
புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமனம் செய்வது தொடர்பில் அரசியலமைப்பு பேரவையில் அடுத்த வாரம் கலந்தாலோசிக்கப்படவுள்ளது.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன எதிர்வரும் தனது பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.
அடுத்த வாரம் நியமனம்
அதனையடுத்து பொலிஸ் மா அதிபர் பதவிக்கான நபர் ஒருவர் அல்லது பலரின் பெயர்களை ஜனாதிபதி அரசியலமைப்புப் பேரவைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதில் பொருத்தமான ஒருவரை அரசியலமைப்புப் பேரவை தெரிவு செய்யும்.
தற்போதைய நிலையில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான நிலந்த ஜயவர்த்தன, லலித் பதிநாயக்க, தேசபந்து தென்னகோன் ஆகியோர் தகைமை பெற்றுள்ளனர்.
இவர்களில் ஒருவர் அடுத்த வாரம் புதிய பொலிஸ் மா அதிபராக நியமனம் பெறவுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan
