கிழக்கு மாகாண பட்டதாரிகள் நியமனங்கள் குறித்து ஆளுநரிடம் கோரிக்கை
இடை நிறுத்தப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனத்திற்காக பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த பட்டதாரிகளின் ஆசிரியர் நியமனம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் (Trincomalee) உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த விடயம் தொடர்பில் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, பட்டதாரிகளின் சங்க குழுவினருடன் ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) கலந்தாலோசித்துள்ளார்.
ஆசிரியர் நியமன பரீட்சை
அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகளின் நியமனங்கள் உரிய காலப்பகுதிக்குள் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

அதில் ஒரு அங்கமாகவே, இடைநிறுத்தப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனத்திற்காக பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த பட்டதாரிகளின் ஆசிரியர் நியமனம் குறித்து ஆளுநரிடம் தெரியபடுத்தப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam