பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக பாரத் அருள்சாமி நியமனம்! (Photos)
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக அரசியல் - தொழிற்சங்க - சமூக மற்றும் சர்வதேச செயற்பாட்டாளரான பாரத் அருள்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்டஉட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் இதற்கான நியமனம் இன்று (03.04.2023) வழங்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட துறையின் மனித வள அபிவிருத்தி, உட்கட்டமைப்பு மற்றும் துறைசார் அபிவிருத்திக்கு பொறுப்பாக செயற்படும் மிக முக்கிய நிறுவனமே பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியமாகும்.

தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கீழ் குறித்த நிறுவனம் இயங்கி வருகின்றது.
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக இதற்கு முன்னரும் பாரத் அருள்சாமி பதவி வகித்துள்ளார்.
அக்காலத்தில் அவரின் செயற்பாடுகள் சிறப்பாக அமைந்தன. இதனைக்கருதியே அவருக்கு மீண்டும் அப்பதவி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவராகவும் பாரத் அருள்சாமி பதவி வகிக்கின்றார்.
அக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளராகவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதம நிறைவேற்று அதிகாரியாக காந்தி சௌந்தராஜன்
சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக காந்தி சௌந்தராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் இதற்கான நியமனம் இன்று (03.04.2023) வழங்கப்பட்டுள்ளது.

நியமனம் வழங்கும் நிகழ்வு காந்தி சௌந்தராஜன் இதற்கு முன்னர் பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அதிகார சபையின் தலைவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
ரோஹினியை சிக்க வைக்க போட்ட பிளானில் மனோஜிற்கு ஏற்பட்ட நிலைமை... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam