புதிய அமைச்சர்கள் நியமனம் ஜனவரி 15 வரை சாத்தியமில்லை என தகவல்

Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lanka Budget 2023
By Rakesh Dec 29, 2022 10:00 AM GMT
Report

வரவு செலவுத் திட்டம் முடிந்ததும் புதிய அமைச்சர்கள் நியமனம் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும், எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை புதிய அமைச்சர்கள் நியமனம் சாத்தியமில்லை என ஜனாதிபதி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

10 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், சில இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளனர். இந்த நியமனம் இழுபறியில் செல்கின்றது.

இந்த இழுபறி காரணமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கான எதிர்ப்பு மொட்டுக் கட்சிக்குள் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.

புதிய அமைச்சர்கள் நியமனம் ஜனவரி 15 வரை சாத்தியமில்லை என தகவல் | Appointment New Ministers Possible January 15

அமைச்சுப் பதவி கேட்டு ரணில் விக்ரமசிங்கவிடம் பசில் ராஜபக்ச பல மாதங்களுக்கு முன் 12 பேர் அடங்கிய பெயர்ப்பட்டியல் ஒன்றை வழங்கியிருந்தார்.

அமைச்சுப் பதவிகள்

பசில் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் ரணில் அசையவில்லை. அதற்குக் காரணம் அந்தப் பட்டியலில் இருந்த நால்வர்தான்.

நாமல் ராஜபக்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜோன்சன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன ஆகிய நால்வரே இதற்கு காரணம்.

மக்கள் மத்தியிலும் மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் இவர்களுக்கு எதிர்ப்பு இருப்பதால் இவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்க முடியாது என்று ரணில் உறுதியாகக் கூறிவிட்டார்.

சஜித் அணியில் இருந்து அரசாங்கத்தில் இணையப் போகின்றவர்களும் அவர்கள் அமைச்சர்களாவதை விரும்பவில்லை.

மொட்டுக் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவையும், பிரதமர் தினேஷ் குணவர்த்தனவையும் அழைத்து நிலைமையை ஜனாதிபதி விளக்கிக் கூறினார்.

அதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். வேறு பெயர்ப்பட்டியலைத் தருகின்றேன் என்று மகிந்த கூறியிருந்தார்.

புதிய அமைச்சர்கள் நியமனம் ஜனவரி 15 வரை சாத்தியமில்லை என தகவல் | Appointment New Ministers Possible January 15

வரவு  செலவுத் திட்டத்தைத் துருப்புச் சீட்டாகாக் கொண்டு தமது கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அமைச்சுப் பதவிகளைக் கைப்பற்றுவதற்கு அவர்கள் முயற்சி செய்துள்ளனர்.

சில அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீட்டைத் தோற்கடித்து ரணிலைப் பணிய வைப்பதற்கு முயற்சித்தனர். அது முடியவில்லை. ரணிலோ இந்த விடயத்தில் மிகவும் அமைதியாக இருந்தார்.

காரணம் அவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்கு அவரிடம் ஓர் ஆயுதம் இருந்தது. அதனால் ரணில் அசால்டாக நடந்துகொண்டார்.

இந்த விடயம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு பற்றி பசிலிடம் ரணில் கூறியுள்ளார்.

வரவு செலவுத் திட்டம்

வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் எனக்கு எந்த நட்டமும் இல்லை. மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத்தான் நட்டம்.

வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் நாடாளுமன்றத்தைக் கலைக்க நேரிடும்.

அப்படிக் கலைத்தால் நாடு இப்போது இருக்கும் நிலையில் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோல்வியடைவார்கள். நட்டம் உங்களுக்கே அன்றி எனக்கில்லை.

புதிய அமைச்சர்கள் நியமனம் ஜனவரி 15 வரை சாத்தியமில்லை என தகவல் | Appointment New Ministers Possible January 15

அமைச்சரவை நியமனம் 

அமைச்சுப் பதவிக்கு ஆசைப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதியில் பதவியையும் இழக்கப் போகிறீர்கள் என்றார் ரணில். அதனால் சற்று ஆடிப்போனார் பசில். உண்மைதான்.

இது தேவையில்லாத சண்டை. மீண்டும் கட்சிக்குள் பிளவையும் வீழ்ச்சியையுமே தரும் என்று உணர்ந்த பசில் அந்த விவகாரத்தை அப்படியே ஜனாதிபதியின் விருப்பத்துக்கே விட்டுவிட்டார்.

இந்நிலையில், அமைச்சரவை நியமனம் இன்னும் காலம் தாழ்த்தப்படும் என்று அறியமுடிகின்றது.

அதாவது, ஜனவரி 15ஆம் திகதி வரை சாத்தியமில்லை என்று ஜனாதிபதி வட்டாரத்தில் இருந்து அறியமுடிகின்றது என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US