வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் பதவியேற்பு
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக ஜி.சுகுணன் கடமையினை பொறுப்பேற்றுள்ளார்.
வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணை, மாவட்ட பொது வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களின் இடமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
பதவியேற்பு
அந்த வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக ஜி.சுகுணன் இன்று (03.04.2024) காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.
புதிய பணிப்பாளர் ஜி.சுகுணன் இதற்கு முன்னர் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 5 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
