முல்லைத்தீவில் புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனம்
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் முத்துக்குமாரசுவாமி சர்மா உமாசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் சுகாதார சேவைகள் பணிப்பாளராக இன்று (03.04.2024) காலை 9.30 மணிக்கு தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
பதவி வெற்றிடம்
முன்னைய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றி வந்த குலலிங்கம் அகிலேந்திரன் வவுனியா (Vavuniya) ஓமந்தை பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நிலையில் குறித்த பதவி வெற்றிடமாக காணப்பட்டது.
இந்நிலையில் மருத்துவ நிர்வாக துறையில் சிரேஸ்ட தரத்துக்கான பதவி உயர்வுகள் சுகாதார அமைச்சினால் அண்மையில் வழங்கப்பட்டதற்கு அமைவாக வைத்தியர் மு. உமாசங்கர் குறித்த முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |