கிழக்கு மாகாண ஆளுநரின் கோவிட் -19 செயலணியில் பிரதிநிதியொருவர் நியமனம்
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பதின் கோவிட் - 19 செயலணியில் முஸ்லிம் பிரதிநியொருவரும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய அனஸ் அஹமட் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று(27) தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் 24 மணித்தியாலங்களும் செயற்படும் வகையில் ஏழு பேரைக் கொண்ட விசேட கோவிட் செயலணியொன்று மாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்டது.
கோவிட் இடர்நிலை தொடர்பில் பொதுமக்களினால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் மற்றும் கருத்துக்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையிலேயே இந்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் முஸ்லிம் பிரதிநிதியொருவர் உள்ளடக்கப்படாமை தொடர்பில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நேற்று ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பதினை இன்று தொடர்புகொண்ட போது
குறித்த செயலணியில் முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த அனஸ் அஹமட் என்பவர்
நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.