புதிய பிரதமராக கரு ஜயசூரியவை நியமிப்பது தொடர்பில் தகவல்
சர்வகட்சி இடைக்கால அரசின் பிரதமர் பதவிக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்குப் பல கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 13 யோசனைகளுக்கமைய, இடைக்கால அரசமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் நேற்று இணக்கம் வெளியிட்டது.
எனவே, இடைக்கால அரசமைக்க ஜனாதிபதி முடிவெடுத்தால் பிரதமராகக் கரு ஜயசூரிய நியமிக்கப்படுவார் என்று அந்தச் செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரு ஜயசூரிய நாடாளுமன்றம் வருவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின்
தேசியப்பட்டியில் எம்.பி. ஒருவர், தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் எனவும்
தகவல் வெளியாகியுள்ளது.
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விஜய் சேதுபதி Cineulagam