யாழ். மத்திய கல்லூரி அதிபர் நியமனம் தொடர்பில் பெற்றோரின் நிலைப்பாடு
யாழ். மத்திய கல்லூரியில் அதிபராக இருக்கும் இந்திரகுமார் பாடசாலையின் அபிவிருத்தி சம்பந்தமான விடயங்களில் மேற்கொள்ளும் செயற்பாடுகளில் பெற்றோராகிய எமக்கு திருப்தி அளிக்கக்கூடிய வகையிலே உள்ளது என மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண ஊடக மையத்தில் நேற்று (01.03.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள எந்த துறை சார்ந்த மக்களும் குறைகளை கூறும் இடமாகவுள்ள யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரிடமே நாம் எமது பாடசாலை தற்காலிக அதிபரை, நிரந்தரமாக நியமனமாக்கி தரும் படி கோரிக்கை விடுத்திருந்தோம்.
ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பழைய மாணவர் என்ற வகையிலேயே எமது கோரிக்கையை ஏற்று இந்த இடத்திற்கு வருகை தந்தார். மேலும் அதிபரின் வருகையின் பின் எங்களுடைய பிள்ளைகளின் நடத்தைகளில் மாற்றத்தை நாம் எம் கண் கூடாக அவதானித்துக் கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




