யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்திற்கு புதிய பீடாதிபதி நியமனம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர், நாளை(21.03.2026) முதல் தொடர்ந்து வரும் மூன்று வருடங்களுக்குச் செயற்படும் வகையில், பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கலைப் பீடச் சபை சபையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பீடாதிபதி தெரிவு
முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் சி.இரகுராமின் பதவிக் காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்த போதிலும், இலங்கை பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் காரணமாக திருத்தச் சட்டம் செயற்பாட்டுக்கு வரும் வரையில் பல்கலைக்கழகங்களில் பீடாதிபதி தெரிவுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

கடந்த 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் திருத்தம் 2026 /2 கடந்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என பல்கலைக்கழக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கலைப் பீடாதிபதி தெரிவுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு, பீடாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு இன்று(20.03.2026) நடைபெற்றது.
நேற்றைய தெரிவின் போது, கலைப் பீடச்சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதில், பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா 27 மேலதிக வாக்குகளைப் பெற்று பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
மட்டக்களப்பில் கிணற்றுக்குள் கேட்ட அலறல் சத்தம்.. உள்ளிருந்து மீட்கப்பட்ட பெண் வழங்கிய திடுக்கிடும் தகவல்
மேலதிக தகவல்- தீபன்