மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனம்
மட்டக்களப்பு (Batticaloa) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
குறித்த பகுதியில் பணிப்பாளராக பணியாற்றி பதவி உயர்வு பெற்று வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் கடமைகளை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து சுகாதார சேவைகள் பணிப்பாளராக ஆர்.முரளீஸ்வரன் இன்று (11) தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
சுகாதார சேவைகள்
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் புதிய பணிப்பாளராக கடமையேற்றுள்ள இவரை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆர்.நவலோஜிதன் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள், பிராந்திய சுகாதார பணிமனையின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் வரவேற்றுள்ளனர்.
கல்முனை (Kalmunai) வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த ஆர்.முரளீஸ்வரன் பதவியுயர்வு பெற்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளராக பதவியேற்றுள்ள நிலையில் குறித்த கடமைக்கு மேலதிகமாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமைப் பொறுப்பினை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |