கொழும்பு துறைமுக நகர ஆணையகத்தின் தலைவராக காமினி மாரப்பன நியமனம்
கொழும்பு துறைமுக நகர ஆணையகத்தின் தலைவராக ஜனாதிபதியின் ஆலோசகரான, ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல , கலாநிதி பிரியத் பந்து விக்ரம, சாலியா விக்ரமசூரியா, குஷன் கொடித்துவக்கு, ஜெரட் ஒன்டாச்சி, ரொஹன் டி சில்வா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய சட்ட ஆவணத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த வாரம் கையெழுத்திட்டார்.
இதன் மூலம் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையம் சட்டம் முழுமையாக செயற்பாட்டுக்கு வந்துள்ளது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையம் சட்டமூலம் 2021 மே 20 அன்று நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலத்துக்கு 149 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர், 58
பேர் அதற்கு எதிராக வாக்களித்தனர்.