ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகராக சாகல ரத்நாயக்க நியமனம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஊழியர்கள் குழுவின் தலைமை அதிகாரியாக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை தவிர தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பதவியும் சாகல ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினரான சாகல ரத்நாயக்க, நல்லாட்சி அரசாங்கத்தில் சட்டம், ஒழுங்கு அமைச்சராக கடமையாற்றினார்.
சாகல ரத்நாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மிக நெருக்கமான அரசியல்வாதிகளில் ஒருவர் என்பதுடன் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக்கட்சியை விட்டு வெளியேறிய போது, பல முக்கிய அரசியல்வாதிகள் அவருடன் சென்றனர்.
எனினும் சாகல ரத்நாயக்க, அகில விராஜ் காரியவசம் போன்றவர்கள் தொடர்ந்தும் ரணிலுடன் இருந்தனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.