கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் கஜேந்திரா நியமனம்
கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் கஜேந்திரா நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார பணிமனை உறுதிப்படுத்தியது.
கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றும் பதில் கடமை வைத்தியருக்கும் பிறிதொருவருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் குறித்த நபரும் கைது செய்யப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறித்த வைத்தியருடன் பேசிய உரையாடல் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனது தொலைபேசி உரையாடல்கள் வெளிவந்தமை தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்குக் குறித்த பெண் வைத்தியர் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி எழுத்து மூலம் கடிதம் அனுப்பி இருந்தார்.
இவ்வாறான நிலையில் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு நிரந்தர
வைத்தியராக கஜேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.



